அவசரகால சட்டம் நடைமுறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
16 view
தற்போது நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பான காரணங்களை விளக்குவதற்காக நாளைய தினம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சில தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ்;மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், அமைதியாகவும் சாதாரண பொலிஸார் நடவடிக்கைகளினால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது. அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் பொது அமைதியின்மை ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும்…
The post அவசரகால சட்டம் நடைமுறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவசரகால சட்டம் நடைமுறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
