இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் தலையிடி ஆரம்பம்! முன்னாள் எரிசக்தி அமைச்சர்
14 view
அடுத்த மூன்று மாதங்களில் இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்பு முடிந்து விடும் ஆபத்து இருப்பதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, கமத்தொழில், மருத்துவச் சேவை, கைத்தொழில் உற்பத்தி ஆகியன பாதிக்கப்படும் விதத்தில் மோசமான உச்சத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும் கம்மன்பில வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியின் பிரதிபலன்கள் மோசமாக மாறக் கூடும். அடிப்படையாக தற்போது இலங்கையில் வெளிநாட்டு அந்நிய செலாவணிகள் எதுவும் இல்லை. விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருப்பதுடன் இலங்கை மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் கடனுதவியில் பெற்றுக்கொண்டது. அதுவும் முடிவடைந்து விடும். அந்த எரிபொருளை தற்போது முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து ரக எரிபொருளும் முடிந்து விடும் ஆபத்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு இரசாயன பசளையை இறக்குமதி செய்வது என எடுத்த அழிவான முடிவு காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படும்…
The post இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் தலையிடி ஆரம்பம்! முன்னாள் எரிசக்தி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் தலையிடி ஆரம்பம்! முன்னாள் எரிசக்தி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
