திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு..! குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
14 view
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆம், 6ஆம் மற்றும் எதிர்வரும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன. அத்துடன், கடந்த 5ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு சென்று, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும். 070 71 01 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதற்கான காலம் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறு…
The post திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு..! குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு..! குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
