சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி
4 view
பெய்ஜிங்,மே 07 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே சீன அரசு,…
The post சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 345 பேருக்கு தொற்று உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
