திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு அட்டூழியம்!
4 view
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு நேற்று முன்தினம் இரவும் நேற்று பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த ஆலயத்தின் காணியின் கடற்கரை பகுதியில் இரவில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆலயத்தினரிடம் பொலிசார் உங்கள் ஆலயத்தின் கடற்கரை எல்லை பகுதியில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்துவருவதாகவும் அவர்களுடன் உங்களையும் கைது செய்யப்படுவீர்கள் எனவும் உங்கள் ஆலய எல்லை வேலியை அமைக்குமாறு தெரிவித்தனர். இதன்அடிப்படையில் ஆலய நிர்வாகம் ஆலயத்தை சுற்றி மதில் அமைத்துவருகின்றனர். இதன் போது குறித்த இளைஞர் குழுவினர் தொடர்ந்து மதில் அமைப்பதற்கு இடையூறு விளைவித்து வந்ததுடன் கட்டிய மதிலின் ஒரு பகுதியை உடைத்துள்ளனர். இந்நிலையில் கோவில் கோபுரம் அமைத்துவரும் வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆச்சாரியர்கள் இருவர் சம்பவதினமான வியாழக்கிழமை இரவு கடற்கரை பகுதியில் அமர்ந்து இருந்த போது…
The post திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு அட்டூழியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு அட்டூழியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
