சுன்னாகத்தில் முன்னறிவித்தல் இன்றி வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
4 view
எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் துண்டித்துள்ளதாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சாரத்தினை கடந்த புதன்கிழமை மின்சார சபையினர் துண்டித்துள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக எம்முடைய வீட்டினை ஒருவரிடம் பொறுப்பாக வைத்து , அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டோம். எங்களின் வீட்டினை பொறுப்பாக வாங்கிக்கொண்டு பணத்தினை கொடுத்த நபர் , தற்போது எங்களிடம் இருந்து பணத்தினை வாங்காது , வீட்டினை முழுமையாக கையகப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று , எம்மை மிரட்டி , எமது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்று இருந்தனர். அது தொடர்பில் சுன்னாகம்…
The post சுன்னாகத்தில் முன்னறிவித்தல் இன்றி வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுன்னாகத்தில் முன்னறிவித்தல் இன்றி வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
