நீதிக்காக போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்க தலைவி
4 view
நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஊடக சந்திப்பபில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் எவ்வித நியாயமான நீதியும் இன்றி தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது. நீதிக்காக போராடிய 115 காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர் இறந்துள்ளனர்.அவர்களின் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் எந்த ஒரு அரசாங்கமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளோடு அக்கறையாக நடந்து கொள்ளவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் உருவாக்கப்பட்ட நிலைமாறு கால நீதியின் அங்கமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்…
The post நீதிக்காக போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்க தலைவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிக்காக போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்க தலைவி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
