அனைவருக்கும் பொருந்தும் ஆட்சி சூழலை உருவாக்க வேண்டும்: உமாசுதன்
4 view
கொழும்பு,மே 06 தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிசெய்தல் மற்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சிபொருந்தும் சூழலை உருவாக்குதல் என்பன தற்போதைய சூழலில் அவசியமானதென யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளரும் வைத்திய கலாநிதியுமான கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் 2மணி வரை நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் கையில் கறுப்புப்பட்டி அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாத சமூக, பொருளாதார, சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் மோசமான நிதி ஒழுக்கத்தால் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அந்நிய செலாவணி நெருக்கடி, உயர் பணவீக்கம், சுகாதார நெருக்கடி மற்றும் எரிசக்தி நெருக்கடி போன்றவற்றால் மக்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர்.…
The post அனைவருக்கும் பொருந்தும் ஆட்சி சூழலை உருவாக்க வேண்டும்: உமாசுதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைவருக்கும் பொருந்தும் ஆட்சி சூழலை உருவாக்க வேண்டும்: உமாசுதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
