கிழக்கு மாகாண ஆசிரிய நியமனங்கள் குறித்து மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி. கோரிக்கை
15 view
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமன பாடசாலைகள் குறித்து மீளாய்வு செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சுச் செயலாளருக்கு அவர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பல ஆசிரியர்களின் பெற்றோர்களினால் பல்வேறு குறைபாடுகள் என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றில் பொதுவாக பின்வரும் விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதை தங்களது கவனத்திற்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொக்குவரத்துப் பிரச்சினைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இயன்றவரை ஆசிரியர்களின் வசிப்பிடத்திற்கு அண்மையில் உள்ள பாடசாலைகள் வழங்கப்பட வேண்டுமென்பதை கொழும்பு கல்வி அமைச்சு செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் பல ஆசிரியர்களுக்கு வசிப்பிடத்திலிருந்து…
The post கிழக்கு மாகாண ஆசிரிய நியமனங்கள் குறித்து மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண ஆசிரிய நியமனங்கள் குறித்து மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி. கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
