யாழ்.போதனாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் நெருக்கடி!! – மருத்துவர் யமுனாநந்தா எச்சரிக்கை
45 view
யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்தார். அவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் பல பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது. இதனால் அவசர சத்திரசிகிச்சை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்திரசிகிச்சை தவிர்ந்த ஏனைய சத்திரசிகிச்சைகள் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மயக்க மருந்துகள், சேலைன், சத்திரசிகிச்சையில் அதிகமாகத் தேவைப்படும் பெட்டடின் உட்பட பல மருந்துகள் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே உபயோகிக்கக்கூடியதாக உள்ளன. புற்றுநோய்களுக்கான சிகிச்சை உட்பட பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் பொதுமக்களை விழிப்படைய வைத்தல் அவசியம் தேவை. விபத்துக்கள், குழுமோதல்கள், கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து தற்போதைய சூழலை எதிர்கொள்ள அனைவரும் உதவுதல் வேண்டும். மேலும் வைத்தியசாலைச் சமூகம் மருத்துவ சேவையினைத் தொடர மனித நேய மருத்துவ அவசர…
The post யாழ்.போதனாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் நெருக்கடி!! – மருத்துவர் யமுனாநந்தா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.போதனாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் நெருக்கடி!! – மருத்துவர் யமுனாநந்தா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
