தேர்தல் ஒன்றே வழி – நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து! கஜேந்திரகுமார் எச்சரிக்கை
13 view
இலங்கை மக்களின் விருப்பங்களுக்கு அரசாங்கம் செவிசாய்காவிடின் நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அந்த கலவரத்தை அடக்குவதற்கு இராணுவத்தையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்துவார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் ஒன்றே நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரே வழி என கூறியுள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் இன்று தாம் செய்த தவறை உணர்ந்துள்ளனர். ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களால் இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ஆகவே இவர்கள் அரசாங்கத்தில் தொடர முடியாது. அவர்கள் பதவி விலக வேண்டும். மக்கள் கோருகின்ற போதிலும் அதற்கு செவிசாய்ப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதில்லை என தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் மக்களுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேறு வழியில்லை. ஆகவே தான் அவர்கள் ஏனைய ஜனநாயக வழிகளில் போராடுகின்றனர். அதன்…
The post தேர்தல் ஒன்றே வழி – நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து! கஜேந்திரகுமார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் ஒன்றே வழி – நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து! கஜேந்திரகுமார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
