அம்பாறையில் பொலிஸ் காவலரண் எரிப்பு – நேரடியாக விரைந்த மனித உரிமை ஆணைக்குழு!
4 view
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதல் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்களிடம் இவ்விடயம் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் பதற்றம் ஏற்பட சம்பவ இடத்தில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் இறந்துவிட்டதாக அங்கு நின்றவர்கள் கூறிய வதந்தியே கலவரமாக மாறுவதற்கு வழியேற்பட்டதாக…
The post அம்பாறையில் பொலிஸ் காவலரண் எரிப்பு – நேரடியாக விரைந்த மனித உரிமை ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறையில் பொலிஸ் காவலரண் எரிப்பு – நேரடியாக விரைந்த மனித உரிமை ஆணைக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
