பாலமுனை வீதிசோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தில் 11 பொலிசார், ஒரு ஊடகவியலாளர் உட்பட 16 பேர் படுகாயம்-
5 view
பாலமுனை வீதிசோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தில் 11 பொலிசார் ஒரு ஊடகவியலாளர் உட்பட 16 பேர் படுகாயம்– (கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பொலிஸ் வீதிசோதனைச் சாவடியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பொலிஸ் காவல் அரண் தீக்கிரையாக்கப்பட்டதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் ஊடகவியலாள் ஒருவர் உட்பட 16 பேர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு 11.30 மணிக்கு மோட்டர்சைக்கிள் ஒன்றில் தலைகவசம் இன்றி பிரயாணித்த ஒருவரை கடமையில் இருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது வாய்தர்க்கம் மோதலாக உருவாகியதையடுத்து மோட்டர்சைக்கிளை செலுத்தி சென்றவர் காயமடைச்துள்ளார். இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய சுமார் 500…
The post பாலமுனை வீதிசோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தில் 11 பொலிசார், ஒரு ஊடகவியலாளர் உட்பட 16 பேர் படுகாயம்- appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாலமுனை வீதிசோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தில் 11 பொலிசார், ஒரு ஊடகவியலாளர் உட்பட 16 பேர் படுகாயம்- appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
