வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரித்தது!
17 view
அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெற்றிலைக்கூறு தற்போது 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக வெற்றிலை வியாபாரிகளிடம் கேட்டபோது தற்போது பாக்கு ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாவாகவும் வெற்றிலை 8 ரூபா தொடக்கம் 10 ரூபாவாகவும் புகையிலை 150 ரூபா தொடக்கம் 240 வரையும் விற்பனை செய்யப்படுவதால் வெற்றிலைக்கூறின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
The post வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரித்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரித்தது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
