கொள்ளையிட வந்தவர்கள் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு
16 view
யாழ், மே 06 வீட்டுக்குள் கொள்ளை கும்பல் நுழைந்ததை அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட நிலையில் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி அயலவர்களால் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
The post கொள்ளையிட வந்தவர்கள் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளையிட வந்தவர்கள் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
