கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடு அமல்
4 view
பீஜிங், மே 06 கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன தலைநகர் பீஜிங்கில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகுக்கு பரப்பிய சீன நாடு, இப்போது அதில் இருந்து மீள முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டின் பொருளாதார தலைநகரான ஷாங்காய் கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் முடங்கி உள்ளது. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கிக்கிடக்கிறார்கள். கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஷாங்காய் நகரின் நிலை இதுதான். மக்கள் போதுமான உணவைப் பெறவே போராடுகிற கடினமான தருணம் வந்துள்ளது. ஆனாலும் அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் அளவில் 4,390 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிலைமை தலைநகர் பீஜிங்கிற்கும் வந்துவிடக்கூடாது என்று சீன அரசு முன்கூட்டியே உஷாராகி உள்ளது. அங்கு கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து இதுவரை 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீஜிங்…
The post கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடு அமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
