ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பயிற்சி
4 view
மாஸ்கோ, மே 06 உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் யாரும் எதிர்பாராத வகையில் 70 நாட்களை கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்தப் போர் தொடங்கிய உடனேயே ரஷியா தனது அணுசக்தி படைகளை அதிகபட்ச உஷார் நிலையில் வைத்தது. அதுமட்டுமின்றி, உக்ரைன் போரில மேற்கத்திய நாடுகள் நேரடியாக தலையிட்டால், அவர்களுக்கு மின்னல் வேக பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். இதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி, பேசுபொருளாக மாறின. இந்த நிலையில், ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பயிற்சி பெற்றதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பயிற்சியை ஏறத்தாழ 100 படை வீரர்கள் எடுத்ததாக தெரிய…
The post ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பயிற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
