முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்
5 view
முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் இன்று (05) நாடு பூராகவும் நடைபெற்றன. கிண்ணியா மத்திய கல்லூரியின் முதலாந்தர மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா கல்லூரியின் அதிபர் அனீபா தலைமையில் இன்று (05) இடம் பெற்றது. கல்லூரியின் அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் ஆசிரியர் வள நிலைய பொறுப்பதிகாரி நாம்தீன் கலந்து சிறப்பித்தார். இதில் ஆசிரியர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர். கிண்ணியா அல் புர்க்கான் வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்கள் வரவேற்பு. கிண்ணியா – சின்னம் பிள்ளை சேனை கிராமத்தில் உள்ள கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட அல் புர்க்கான் வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் பாரிஸ் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் இரண்டாம் தர மாணவர்கள் இன்று (05) புதிதாக முதலாம் தரத்துக்கு வருகை தந்த 16 மாணவர்களுக்கு மாலை அணிவித்து…
The post முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
