மன்னிப்பு கோராவிட்டால் நட்டஈடு தரவேண்டும்! ஹிருணிகா மீது வழக்கு தொடர தயாராகும் மஹிந்த சகா

41 view
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன்,தனது சட்டத்தரணி ஊடாக ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 15, 2022 அன்று செய்தியாளர் மாநாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை, தனது நற்பெயருக்கு கேடு விளைவிப்பவை என்றும், அதற்கு மன்னிப்பு கோராவிட்டால், நட்டஈடு கோரி வழக்கு தொடர்வேன் என்றும் அறிவித்துள்ளார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்கு விஜயம் செய்த T7JSH இலக்கம் கொண்ட ஜெட் விமானத்தின் உரிமையாளர் கனநாதன் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். மேலும், கனந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர் உகாண்டாவில் உள்ள சிலோன் கபேயின் உரிமையாளர் என்றும் ஹிருணிகா கூறினார். அத்துடன், விடுதலைப் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கனநாதனிடம் இருந்ததாகவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, இட்டுக்கட்டப்பட்டவை என்றும், மலிவான அரசியல் ஆதாயம் மற்றும் உள்நோக்கத்துக்காக சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கள், தனது நற்பெயருக்கு…
The post மன்னிப்பு கோராவிட்டால் நட்டஈடு தரவேண்டும்! ஹிருணிகா மீது வழக்கு தொடர தயாராகும் மஹிந்த சகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース