நாடு முழுவதிலும் கொந்தளிப்பு நிலை
15 view
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ளமையால் நாட்டில் கொந்தளிப்பான நிலைமையொன்று உருவாகியுள்ளது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தை பயன்படுத்த முயற்சிப்பது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைநாட்டில் நேற்றைய தினம் ( 20) மட்டும் காலை முதல் மாலை வரையிலான காலப்பகுதியில் 12 மாவட்டங்களில் 18 பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ் தெரிவித்தார். குறித்த அறிக்கையில், மேற்குறித்த 18 பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மேலதிகமாக பல இடங்களிலும் சிறிய சிறிய குழுக்களாக சேர்ந்து எதிர்ப்புக்களை வெளியிட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, நாட்டின் பல முக்கிய வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதகவும், இதனால் எரிபொருள் விநியோகம், அத்தியவசிய உணவு விநியோகம், உள்ளிட்ட பொருட்கள் சேவைகளை முன்னெடுக்கவும் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புகள்…
The post நாடு முழுவதிலும் கொந்தளிப்பு நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதிலும் கொந்தளிப்பு நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
