கம்பளை – கண்டி பிரதான வீதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
1 view
கம்பளை – கண்டி பிரதான வீதியின் வெலிகல்ல பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான கார் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
The post கம்பளை – கண்டி பிரதான வீதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கம்பளை – கண்டி பிரதான வீதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
