அர்ச்சுனா எம்.பி., முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை
1 view
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கும் எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) திங்கட்கிழமை வழங்கிய உத்தரவின்படி, வழக்கு முடியும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு ஆறு பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வைத்தியர் சுகுணன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு எதிராகவும், யூடியூப் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கும் எதிராகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
The post அர்ச்சுனா எம்.பி., முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனா எம்.பி., முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
