மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு!
1 view
களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) குறித்த வீடொன்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த 57 வயதானவர் எனவும் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. […]
The post மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.