அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு
9 view
2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகைஇன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்றுமுதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
The post அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
