திருகோணமலையில் சோதனை சாவடிகள்!
6 view
திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் திருகோணமலைப் பகுதிக்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இதனால் கரையோரப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருகோணமலை டொக்யாட் வீதி, சிறிமாபுர, அலஸ் தோட்டம், நிலாவெளி போன்ற முக்கிய இடங்களில் சொகுசு வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருகோணமலையில் சோதனை சாவடிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் சோதனை சாவடிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.