கோல்பேஸ் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும் புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு- மொட்டு கட்சி குற்றச்சாட்டு..!
4 view
கோல்பேஸ் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும், புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், புலிகளுக்கு தேவையானவற்றையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்துவருவதாகவும், இதன்ஓர் அங்கமாகவே மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்குரிய ஏற்பாடு இடம்பெறுகிறது. அதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும், புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் புலிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு இன்று கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார்.
The post கோல்பேஸ் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும் புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு- மொட்டு கட்சி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோல்பேஸ் போராட்டத்துக்கு டயஸ்போராக்களும் புலிகளுமே ஜே.வி.பியினருக்கு ஒத்துழைப்பு- மொட்டு கட்சி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.