மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!
18 view
வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதானஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. கடும் மழைக்குமத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
The post மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.