யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!
18 view
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது. மேஜர் விநோதரன் (பாலசுந்தரம் அஜந்தன்) னின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர். இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.
The post யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
