நல்லூரில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது
8 view
யாழ்ப்பாணம், கச்சேரி – நல்லூர் மூத்தவிநாயகர் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று இன்றையதினம் உயிருடன் பிடிபட்டது. வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
The post நல்லூரில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.