அத்துமீறிய 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவில் கைது
8 view
யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இன்று(10.11.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 கடற்றொழில் படகுகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post அத்துமீறிய 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அத்துமீறிய 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவில் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
