ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு?
10 view
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இன்றையதினம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தவர்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் அடங்குகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது உறுதியாகியுள்ளது.
The post ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
