கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
4 view
கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்து வசதி கருதி குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் உத்தியோகபூர்வமாக குறித்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அதிகரித்த வெப்பநிலையை கருத்திற்கொண்டு முதன்முறையாக உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பஸ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை பொதுமக்களின் வசதி கருதி உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பஸ்சேவையில் ஈடுபடுவோருக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
