கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு ஹிருணிகா போட்டியா?
13 view
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள கருத்து தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், ஆனால் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்ரவும் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ளதாக வெளியான ஊகங்கள் குறித்து கேட்டதற்கு, அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
The post கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு ஹிருணிகா போட்டியா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு ஹிருணிகா போட்டியா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
