பிளவுபடுகிறதா கூட்டமைப்பு? விக்னேஸ்வரனுடன் ரெலோ அவசர சந்திப்பு!

9 view
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நேரத்தில் குறித்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சந்திப்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விக்னேஸ்வரன் மணிவண்ணனுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக அறிவித்த சில நிமிடங்களிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றமை மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.  
The post பிளவுபடுகிறதா கூட்டமைப்பு? விக்னேஸ்வரனுடன் ரெலோ அவசர சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース