பொருளாதார நிலையங்களுக்கு 53 ரூபாவிற்கு முட்டை!
6 view
கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று (சனிக்கிழமை) 8 இலட்சம் முட்டைகள் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
The post பொருளாதார நிலையங்களுக்கு 53 ரூபாவிற்கு முட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார நிலையங்களுக்கு 53 ரூபாவிற்கு முட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
