'எம்மிடமிருந்து எம்மவர்க்கு' கிளிநொச்சியில் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!
6 view
“எம்மிடமிருந்து எம்மவர்க்கு” எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் குறித்த சுத்திகரிக்கும் பணி முன்னெடுப்பட்டது. குறித்த பணியில் இளைஞகள் பலர் தாமாக முன்வந்து பணியில் ஈடுபட்டதோடு கல்வி கற்கும் ஏழை மாணவர்களிற்கு உதவும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் மக்கள் பணம் வழங்கி இளைஞர்களை உட்சாகப்படுத்தினர். மேலும் குறித்த பணத்தை இளைஞர்கள் உரிய முறையில் தேவை உடையோருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
The post 'எம்மிடமிருந்து எம்மவர்க்கு' கிளிநொச்சியில் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'எம்மிடமிருந்து எம்மவர்க்கு' கிளிநொச்சியில் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
