இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை!
11 view
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பூனேவில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் தசுன் ஷானக்க 56 ஓட்டங்களையும் ,குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களையும், சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி சார்பில் அதிகட்சமாக அக்ஷர் பட்டேல் 65 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
The post இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
