இந்த ஆண்டு ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும்- ஜனநாயகப் போராளிகள் வேண்டுகோள்!
8 view
தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பூரணமாக நம்ப முடியாமல் இருந்தாலும், தமிழ் மக்களுக்கான ஏதோவொரு விடயத்தை அவர் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றமை புலப்படுகின்றது. எனவே பிறந்துள்ள இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களின் சந்திப்பு மற்றும் இணைப்பாளர்கள், இளைஞர் அணி உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் பிரதேச இணைப்பாளர்களான யு.சதீஸ் மற்றும் க.லதாகரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை நிருவாகப் பொறுப்பாளர் தீபன், மட்டக்களப்பு இணைப்பாளர் சுதாகர், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கட்சியின் இளைஞர் அணிக்கான வாகரைப் பிரதேச பொறுப்பாளராக சி.துனேஸ்காந் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இக்கலந்துரையாடலின் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…
The post இந்த ஆண்டு ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும்- ஜனநாயகப் போராளிகள் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆண்டு ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும்- ஜனநாயகப் போராளிகள் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
