மாவை தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள்: விக்கியின் யோசனைக்கு ரெலோ அமோக வரவேற்பு!

6 view
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வரவேற்றுள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் அது இனப்பிரச்சினைக்கான தீர்வில் பாதக நிலைமையைத் தோற்றுவிக்கும் என்று கூறியிருந்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஓரணியில் திரளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
The post மாவை தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள்: விக்கியின் யோசனைக்கு ரெலோ அமோக வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース