398 பயணிகளுடன் இலங்கை வந்த ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம்!
10 view
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (எம்ஆர்ஐஏ) திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை வியாழன் (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளன. முதலில் திட்டமிடப்பட்ட விமானம் 404 ரஷ்ய பயணிகளை ஏற்றிச் செல்லும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார் இந்நிலையில், ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை வழங்கும் மூன்றாவது ரஷ்ய விமான சேவையாகும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு விமான நிறுவனங்கள் அஸூர் ஏர் மற்றும் ஏரோஃப்ளோட் ஆகும். டிசம்பர் 26, 2022 அன்று, ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர்…
The post 398 பயணிகளுடன் இலங்கை வந்த ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 398 பயணிகளுடன் இலங்கை வந்த ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
