இந்தியா அணிக்கெதிரான தொடர்: மாற்றம் நிறைந்த இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு!
6 view
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில், விளையாடுவதற்காக இந்தியா செல்லவுள்ளது. இந்தநிலையில் இந்த சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீண்ட உபாதையிலிருந்து மீண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய அவிஷ்க பெணார்டோ மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேபோல 27 வயதான துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் அறிமுக வீரராக நுவனிந்து பெணார்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதுதவிர எல்.பி.எல். தொடரில் சிறப்பாக பந்துவீசிய, நுவான் துசார ரி-20 அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து…
The post இந்தியா அணிக்கெதிரான தொடர்: மாற்றம் நிறைந்த இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா அணிக்கெதிரான தொடர்: மாற்றம் நிறைந்த இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
