ரணில் பச்சைப் பொய் சொல்கிறார்- அங்கஜன் எம்.பி சீற்றம்!
12 view
சுதந்திர தினத்திற்குள் தீர்வு கிடைப்பது என்பது ஒரு பொய்யான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அராலி மத்தி – கணவத்தை பகுதியில் கிராம மக்களிடையேயான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தனை வருட போராட்டம், இத்தனை வருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம். ஆனால் அந்த சுதந்திர தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது. அந்த இணக்கப்பாட்டில் மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அதாவது காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, யாப்பு மாற்றத்தில் தமிழர்களது அபிலாசைகள் குறித்து உள்ளடக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அவர்கள் கூறிய முக்கியமான விடயம், இந்த 35 வருட யுத்தத்தில் நாங்கள் இழந்தவை ஏராளம். பொருளாதாரம், விவசாயம், மீன்பிடி உட்பட சகல துறையிலும்…
The post ரணில் பச்சைப் பொய் சொல்கிறார்- அங்கஜன் எம்.பி சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் பச்சைப் பொய் சொல்கிறார்- அங்கஜன் எம்.பி சீற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
