பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றித்தனத்தை அடக்குவோம் – ஜீவன் எம்.பி
6 view
ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினரால் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களுக்கு கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டிருந்த இ.தொ.காவின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் அங்கு தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கெடுபிடிகள் தொடர்பில் ஆராய்ந்தார். பின்னர், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததுடன், ஒரு கிலோ தேயிலைத்தூளை கூட வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.ஆகையால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்து பேச்சுவாரத்தைக்கு வந்தனர். இந்த பிரச்சினைகள் அட்டன் தொழில் திணைக்களத்தில் இன்று மேலதிக தொழில் ஆணையாளர் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவுக்கும், ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.…
The post பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றித்தனத்தை அடக்குவோம் – ஜீவன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றித்தனத்தை அடக்குவோம் – ஜீவன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
