சிறுநீரக மோசடி – வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை!
6 view
சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பொரளை – கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான தரகர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் இன்று (6) கொழும்பு இலக்கம் 2 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 41 வயதான குறித்த சந்தேகநபர் கொழும்பு 14 கஜிமாவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் சிறுநீரகத்தை பணத்திற்காக விற்பனை செய்பவரகளையும், பெற்றுக் கொள்ளும் நபர்களையும் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டவரென தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த நபர் இடைத்தரகருக்கான கட்டணத்துக்கு மேலதிகமாக சிறுநீரக கொடையாளிக்காக வழங்கப்படும் பணத்திலும் ஒரு பகுதியையும் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டு பணம்…
The post சிறுநீரக மோசடி – வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக மோசடி – வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
