புத்தளத்தில் 'வரைபடமற்றவர்களின் காலடி' கவிதை நூல் அறிமுக விழா!
13 view
புத்திலக்கியத்தளம் கலை, இலக்கிய நண்பர்கள் சந்திப்பு வெளியை ஸ்தாபித்தலும், முல்லை முஸ்ரிபா எழுதிய “வரைபடமற்றவர்களின் காலடி” கவிதை நூல் அறிமுகமும் புத்தளம் அல்காசிமி சிட்டி ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற விவசாய ஆலோசகர் வை.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலை, இலக்கிய நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார். இதன்போது, ஏற்பாட்டுரையை மன்கலைத் தென்றல் எச்.எம்.சுஹைப் ஆசிரியரயரும், வரைபடமற்றவர்களின் காலடி கவிதை அறிமுகத்தை முல்லை ரிஸானாவும், திறனாய்வுரையை மூத்த இலக்கியவாதி ஓய்வு பெற்ற அதிபர் மா. நாகராஜாவும், நூலின் நயவுரையை அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களும் வழங்கினர். அத்துடன், கவிஞர், கலைவாருதி ஹாஜா அலாவுதீன் கவிதை வாசித்தார். ஏற்புரை மற்றும் ஸ்தாபகவுரையையும் நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா முன்வைத்தார். முசலி பிரதேசசபை முன்னாள் தவிசாளர் டபிள்யூ. எம்.எஹியான் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டதுடன், நிகழ்வுக்கு…
The post புத்தளத்தில் 'வரைபடமற்றவர்களின் காலடி' கவிதை நூல் அறிமுக விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் 'வரைபடமற்றவர்களின் காலடி' கவிதை நூல் அறிமுக விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
