திருமலையில் மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு!
7 view
வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இன்று (06)காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் இடம் பெற்றது இக்பால் நகர் மைதானத்தில் ஆரம்பித்த திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி ஊடாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தினை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பெண்கள் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.இவ் ஆர்ப்பாட்டத்தினை பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,ஆண்கள் இளைஞர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எமது வாழ்க்கை எமது உரிமை சுகாதார உரிமைகள் மனித உரிமைகள் பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிசெய், நமது வாழ்க்கை நமது உரிமை முதலான வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மஹஜர் ஒன்றையும் முன்னளிப்பு செய்தனர் “வடக்கு…
The post திருமலையில் மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
