கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சிக்கிய நபர்!
6 view
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து (திங்கட்கிழமை) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி 3ஆம் பிரிவில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான நபர் ஆரையம்பதியை பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் காத்தான்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
The post கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சிக்கிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சிக்கிய நபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
