அத்தியாவசிய மருந்து வகைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும்! – யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
7 view
அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும் என வலியுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த போராட்டத்தில் இந்த மகஜரும் வாசிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய நாம் எமது மேற்படி கோரிக்கையை இத்தாழ் தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள நாங்கள் கடந்த கால யுத்தம்,கொவிட் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும்…
The post அத்தியாவசிய மருந்து வகைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும்! – யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அத்தியாவசிய மருந்து வகைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும்! – யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
