சாமிமலையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
6 view
கடந்த மாதம் 24 ம் திகதி சாமிமலை பகுதிகளில் உள்ள ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான கவரவிலை தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றிய 32 வயது உடைய திருமணமான மூன்று குழந்தையின் தந்தை நல்லையா சிவகுமார் பணிபுரியும் வேலையில் அதி சக்தி வாய்ந்த மின்சாரத்தில் தாக்குண்டு சிகிச்சைக்காக கிலங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அதிதீவிர சிகிச்சைக்காக கன்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த பதினொரு தினங்களாக அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொதனா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
The post சாமிமலையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாமிமலையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
