இலங்கை விரைவில் மீண்டெழும்; எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்! ஜனாதிபதி முழு நம்பிக்கை
6 view
“உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம். நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும். தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும், அதுவே உண்மையான திறமை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருக்கின்றது. அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போதுள்ள அரசமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம். இளைஞர்களின்…
The post இலங்கை விரைவில் மீண்டெழும்; எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்! ஜனாதிபதி முழு நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை விரைவில் மீண்டெழும்; எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்! ஜனாதிபதி முழு நம்பிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
